இந்தியா, மே 23 -- லிச்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்ன தெரியுமா? லிச்சி என்பது சாறு நிறைந்த மணமும், ருசியும் கொண்ட ஒரு பழமாகும். இது இனிப்பாக இருப்பவதைவிட எண்ணற்ற முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்களும் நிறைந்தது. உங்கள் அன்றாட ஊட்டச்சத்து தேவையில் ஒரு கிண்ணம் லிச்சி பழங்கள் அதிகம் பங்களிப்பு செய்கின்றன. இதை நீங்கள் ஃபிரஷ்ஷாக சாப்பிட்டாலும், சாலட்கள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து சாப்பிட்டாலும், அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுவருகிறது. லிச்சி பழத்தில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்கள் என்னவென்றும், அதனால் உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.

லிச்சியில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளன. ஒரு கிண்ணம் லிச்சியை நீங்கள் தினமுமே சாப்பிடலாம். இந்த ஆற்றல் வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உங்கள் நோய் எதிர்ப்...