இந்தியா, மே 20 -- செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியின் அருகே டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் டீ குடிக்கச் சென்றபோது, லாரியை அடையாளம் தெரியாத நபர் கடத்திச்சென்ற சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

டிப்பர் லாரியினை திருடிச்சென்ற நபர், மறைமலை நகரை நோக்கி லாரியைச் செலுத்தியிருக்கிறார். அப்போது, மகேந்திரா சிட்டி சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முருகன், லாரியில் ஏற முயன்று 10 கி.மீ. தொங்கியபடி சென்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், ஏராளமான வாகன ஓட்டிகளும் அந்த கடத்திச்சென்ற லாரியைப் பின் தொடர்ந்து சென்றனர்.

போலீஸாரும் இந்த நபரை வெகுதூரம் துரத்திச்சென்று பிடித்திருக்கிறார்கள். குறிப்பாக, மறைமலை நகர் அருகே தடுப்புகளை ஏற்படுத்தி, போலீஸார் இந்த லாரியை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள்.

மேலும்படிக்க: ஆகாஷ் பாஸ்கரன் படப்பிடிப்பு ...