தூத்துக்குடி, ஏப்ரல் 5 -- தூத்துக்குடியில் கடந்த 18.9.1999 ஆம் ஆண்டு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை கைதி வின்சென்ட் என்பவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், தற்போது டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஒன்பது காவலர்களுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டு காவலர்களை விடுவித்தும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க | சிப்காட் அமைக்க நிலம் கையகப்படுத்தும் முயற்சி; முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு!

தூத்துக்குடி அருகே உள்ள மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவரை கடந்த 1999 செப்டம்பர் 17ம் தேதி அன்று, வழக்கு விசாரணை ஒன்றிற்காக தாளமுத்து நகர் காவல் நிலையத்திற்கு அப்போது உதவி ஆய்வாளராக இருந்த ராமகி...