இந்தியா, மார்ச் 15 -- லட்டு என்ற பெயரே பலருக்கும் வாய் நிறைய நீரை வரவழைக்கும்.

பண்டிகை காலங்களில் மட்டுமின்றி மற்ற நாட்களிலும் இதை ருசிக்க விரும்புவார்கள் பலர். அப்படி லட்டு பிரியர்களுக்கு, சத்தான லட்டுகளை தயாரித்து கொடுத்தால் உடலுக்கு ஏராளமான வைட்டமின்கள் கிடைக்கும்.

ஒவ்வொரு பருவத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப வீட்டில் லட்டுகளைத் தயாரிக்கலாம். அப்படி, கோடை காலத்திற்குப் பயன்படும் லட்டுகளை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

இரவில் பசி எடுத்தாலும் சிலர் லட்டு சாப்பிட்டு, தங்கள் பசியைப் போக்க நினைப்பர். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.

ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் பால் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் பாதாம், முந்திரி, உலர் திராட்சை மற்றும் சில உலர் பழங்களைப் போடலாம். தற்போது கெட்டிய...