இந்தியா, ஏப்ரல் 11 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள் இது 12 ராசிகளுக்கும். கிரகங்கள் மாறும் பொழுது சில வேலைகளில் மற்ற கிரகங்களோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மே மாதம் ஏழாம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அதன் பின்னர் ஆடம்பர நாயகனாக விளங்கக்கூடிய சுக்கிரன் மே 31ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார்.

இந்நிலையில் மேஷ ராசியில் புதன் மற்றும் சுக்கிரன் ஒன்று சேர உள்ளனர். இதனால் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என ஜோதிட ச...