இந்தியா, மார்ச் 22 -- கோடையைக் குளுமையாக்க நாம் எண்ணற்ற குளிர் பானங்களை நோக்கி நகர்கிறோம். கடைகளில் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பானங்கள் அனைத்திலுமே செயற்கை வண்ணங்கள் மற்றும் ப்ரசர்வேடிவ்கள், காஸ் என இருக்கும். அது உடலுக்கு கேடு தருபவைதான். அதற்கு மாற்றாக ஃபிரஷ் பழச்சாறுகளை பருகலாம். அதை நீங்கள் வீட்டிலேயும் செய்து பருகலாம். ஆனால் ஒரே மாதிரியான பழச்சாறுகள் உங்களுக்கு போர் அடிக்கும்போது, ரோஸ் மில்க், பாதாம் மில்க் போன்ற பானங்களை முயற்சிக்கலாம். சூப்பர் சுவையான, கோடையை குளுமையாக்கக் கூடிய ரோஸ் மில்க் பானத்தை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்க முடியும். அது எப்படி என்று பாருங்கள்.

மேலும் கடைகளில் நீங்கள் சென்று ரோஸ்மில்க் பருகினால் அந்த வண்ணத்தை நீங்கள் கைகளில் தொட்டுப்பார்த்தால், அது கைகளிலே ஒட்டிக்கொண்டு வரும். அந்த அளவுக்கு கடைகளில் உள்ள பா...