இந்தியா, மே 6 -- சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த மே 1 அன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ரெட்ரோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். அதனை தொடர்ந்து படம் குறித்தான தனது கருத்துக்களை இயக்குநர் கார்த்திக்கிடம் பகிர்ந்து இருக்கிறார்.

இதனை அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அந்தப்பதிவில், 'ரெட்ரோ திரைப்படத்தை தலைவர் ரஜினிகாந்த் பார்த்து விட்டார். அவருக்கு படம் பிடித்திருந்தது. அவர் என்ன சொன்னார் என்றால், படக்குழு என்னா மாதிரியான உழைப்பை கொடுத்திருக்கிறது. சூர்யாவின் நடிப்பு சூப்பர். குறிப்பாக படத்தின் இறுதி 40 நிமிடங்கள் சூப்பர்.

படத்தில் இடம் பெற்ற சிரிப்பு தொடர்பான விஷயம் நன்றாக இருந்தது என்றார். அவரின்...