இந்தியா, மார்ச் 30 -- ருமாலி என்றால் இந்தியில் கர்சீப் அதாவது கைக்குட்டை என்று பொருள். இதை நீங்கள் அந்தளவுக்கு மெல்லிசாக தேய்த்து கைகுட்டை போல் மடித்துக்கொள்ள முடியும். அதனால்தான் அதற்கு இந்தப் பெயர் வந்தது. இதை நீங்கள் வீட்டிலேயே செய்ய முடியும். ஆனால் இதை நீங்கள் மெல்லிசாக தேய்த்துக்கொள்ளவேண்டும். இதை தவாவில் சேர்த்து செய்ய முடியாது. இதை கடாயை கவுத்துபோட்டு அதில் செய்வார்கள். ஆனால் இதை ஓட்டல்களில் எளிதாக அப்படி செய்ய முடியும். ஆனால் நாம் மெல்லிசாக மாவை தேய்த்து கைகளின் இடையில் மீண்டும், மீண்டும் போட்டு பிரட்டினால் நல்ல மெல்லிசாகவே வந்துவிடும். எனவே பழகிக்கொண்டால் வீட்டில் செய்வதும் எளிது. இதற்கு பன்னீர், தால் என எதை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். இதைச் செய்வதற்கு மைதா மற்றும் கோதுமை என இரண்டு மாவுகளும் தேவை. இதைச் செ...