இந்தியா, மே 11 -- வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். இந்த சூரியன் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். அந்தவகையில், தற்போது சூரியன் செவ்வாயின் ராசியான மேஷத்தில் பயணித்து வருகிறது. இத்தகைய சூழலில் சூரியன் வரும் 2025 மே 15 அன்று அதிகாலை 12:20 மணிக்கு ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.

சூரிய பகவான் ரிஷப ராசிக்குள் நுழையும் போது அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை, வியாபாரத்தில் வெ...