இந்தியா, மே 5 -- வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்தவகையில், மே மாதத்தில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைய தயாராகி வருகிறார் சூரிய பகவான். திரிக பஞ்சாங்கத்தின் படி, 2025 மே 15 அன்று காலை 12:20 மணிக்கு சூரியன் ரிஷப ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார். சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தால் ஜொலிக்கப்போகிறார்கள். சூரியனின் ராசி மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அடையப் போகிற ராசிக்காரர்கள் யார் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வேலை, வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். மரியாதை, ...