இந்தியா, மே 12 -- வேத ஜோதிடத்தின் படி, குரு கிரகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனேனில் மனிதர்களின் வாழ்க்கையில் நடைபெறும் நல்ல காரியங்களுக்கு குரு பகவானின் அருள் தேவை. இந்த குரு பகவான் ஒரு ராசியில் சுமார் 1 ஆண்டு காலம் பயணிப்பார்.

தற்போது குரு பகவான் சுக்கிரனின் ரிஷப ராசியில் பயணித்து வந்த நிலையில், வாக்கியப் பஞ்சாங்கப்படி மே 11 ஆம் தேதியன்று மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, மே 14 ஆம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. எனவே இந்த குரு பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கல்விப் பணிகளில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சாதகமான சூழல் நிலவும். மேலதி...