இந்தியா, ஏப்ரல் 22 -- தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுஹானா குழுமம் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிவு செய்திருக்கிறது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் அம்பாசிடராக இருந்தவர் மகேஷ் பாபு. இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த இரு தரப்பையும் வருகிற ஏப்ரல் 27 அன்று ஆஜராகும் படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பான தேவையான தகவல்களை வழங்க ஏப்ரல் 27 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை அதில் குறிப்பிட்டு இருக்கிறது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்ததற்காக மகேஷ் பாபு ரூ.5.9 கோடியை பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதில், ரூ....