இந்தியா, மார்ச் 13 -- கோலிவுட் திரைத்துறையை பொறுத்தவரை ஒவ்வொரு வாரமும் குறிப்பாக வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அதிலும் இந்த மார்ச் மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகாத நிலையில், சிறுபட்ஜெட் படங்களே வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த மாதம் முதல் வாரத்தில் ஜி.வி. பிரகாஷின் 'கிங்ஸ்டன்', விமலின் 'படவா', யோகி பாபு நடிப்பில் 'லெக் பீஸ்' உள்பட சில படங்கள் வெளியாகியிருந்தது. அந்தவகையில், நாளை (வெள்ளிக்கிழமை) மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த சுவாரஸ்ய தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

பெண்கள் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் 'ராபர்'. கவிதா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யா, டேனி, ஜெ.பி., தீபா, பாண்டியன், சென்றாயன், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்க...