இந்தியா, மார்ச் 15 -- இந்த ரெஸிபியின் தனிச்சிறப்பே வரமிளகாய், பூண்டு இந்த இரண்டு மட்டுமே வேறு எந்த மசாலாவும் கிடையாது. இதன் ருசிக்கு இன்னொரு காரணம் நெய். மட்டன், நெய், பூண்டு, மிளகாய் இவை நான்கும் சேரும்போது கிடைக்கும் மேஜிக் இது. நீர் வற்ற வற்ற இதை சமைக்கும் விதமும் கறியில் இருக்கும் நீரிலேயே கறி வெந்துவிடுவதும் இந்த ரெஸிபியின் சிறப்பாகும்

* மட்டன் (சற்று பெரிய துண்டுகளாக வெட்டப்பட்ட தொடை, முதுகு, கழுத்து, தோள் கறிகள்) - அரை கிலோ

* நெய் - கால் கிலோ

* பூண்டு - 30 பல்

* வரமிளகாய் - 15

* உப்பு - தேவையான அளவு

1. அடுப்பில் ஒரு கனமான கடாயை வைத்து, 200 கிராம் நெய்யை ஊற்றி அது சூடானதும் மட்டன் துண்டுகளைப் போட்டு 2 நிமிடங்கள் கறியை எல்லா பக்கமும் திருப்பி வதக்கவேண்டும்.

2. பின்னர், இதில் உரித்த 30 பல் பூண்டுகளை போட்டு வதக்கவேண்டும். அடுத்த...