இந்தியா, ஏப்ரல் 6 -- தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது மகள் சித்தாராவுடன் விடுமுறை நாளை செலவழிக்க வெளிநாடு் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 5) இதற்காக ஷாம்ஷாபாத் விமான நிலையத்தில் அவர்கள் இருவரும் வந்தனர். தனது குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு அடிக்கடி விடுமுறைக்குச் செல்வது மகேஷ் பாபுவுக்குப் பழக்கம். ஆனால் இந்த முறை அவர் தனது பாஸ்போர்ட்டைக் காண்பித்தது வைரலாகி உள்ளது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அதில் பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலிக்கும் தொடர்பு இருக்கிறது.

மேலும் படிக்க| ஆக்ஷன் நாயகியை தேடிச் சென்ற ராஜமௌலி.. 8 ஆண்டுகளுக்கு பின் இந்திய சினிமாவிற்கு திரும்பும் நடிகை

ராஜமௌலி இயக்கத்தில், மகேஷ் பாபு நடிக்கும் SSMB 29 (தற்காலிகப் பெயர்) படத்தின் ஷூட்டிங்கில் இருந்து மகேஷ் பாபு தற்போது ஓய்வு எடுத்துள்ளார். அதனால்...