இந்தியா, பிப்ரவரி 25 -- Lord Sani: ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றி பயணம் செய்து வருகின்றனர். மனித வாழ்க்கையில் கிரகங்களின் இடமாற்றமானது ஏதோ ஒரு தாக்கத்தில் கொடுத்து வருகிறது. சில சமயங்களில் ஒரு கிரகம் மற்ற கிரகத்தோடு இணையும் பொழுது சுப மற்றும் அசுப பலன்களை கொடுக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் கும்ப ராசியில் சந்திர பகவான் பயணம் செய்ய உள்ளார்.

சனி மற்றும் சந்திரன் கும்ப ராசியில் சேர்ந்து பயணம் செய்கின்ற காரணத்தினால் மோசமான யோகம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்வு வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி அன்று நிகழவுள்...