இந்தியா, மார்ச் 21 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் நவகிரகங்களில் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகமாக புதன் பகவான் விளங்கி வருகின்றார். இளவரசனாக விளங்கி வரும் புதன் பகவான் நரம்பு, படிப்பு, வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

புதன் பகவானால் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் புதன் பகவான் அஸ்தமிக்க போகின்றார். புதன் பகவானின் அஸ்தமனம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகளில் மூலம் கஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது...