இந்தியா, ஏப்ரல் 19 -- நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம்,, முயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசிகள் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். அந்த வகையில் தற்போத...