இந்தியா, மார்ச் 29 -- Nageshwarar: உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். நமது நாட்டின் சிவபெருமானுக்கு இருக்கக்கூடிய பக்தர்களுக்கு பஞ்சம் கிடையாது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதுமே சிவபெருமானின் உறைவிடமாக கருதப்படுகிறது.

சென்னையில் இருக்கக்கூடிய நவகிரக தலங்களில் ராகு பரிகார தளமாக விளங்கக்கூடிய கோயில்தான் குன்றத்தூர் அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலின் மூலவராக அருள்மிகு நாகேஸ்வரர் விளங்கி வருகின்றார். இவர் ராகு கிரகத்தின் அம்சமாக கருதப்படுகிறார். ராகு பகவானால் ஏற்படக்கூடிய அனைத்து தோஷங்களுக்கும் இது பரிகார நிவர்த்தி தலமாக விளங்கி வருகிறது.

இந்த பகுதியை சோழ அரசனான அனபாயன் ஆட்சி செய்து வந்துள்ளார். அப்போது அவரது அரசவையில் அருண்மொழி ராம தேவர் என்ற ...