இந்தியா, மார்ச் 18 -- Rahu Sun Conjunction: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மாற்றத்தை செய்வார்கள். கிரகங்களின் ராசி மாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. சில நேரங்களில் ஒரு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று சேரும் சூழல் ஏற்படும். அந்த நேரத்தில் சில ராசிகளுக்கு நன்மைகள், சில ராசிகளுக்கு அசுப பலன்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக விளங்கும் சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் நுழைந்தார். ஏற்கனவே மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சூரிய பகவான் இணைந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று ராகு சூரியன் சேர்க்கை நிகழ்...