இந்தியா, பிப்ரவரி 21 -- Rahu Ketu: ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களாக விளங்கக்கூடியவர்கள். ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு மற்றும் கேது விளங்கி வருகின்றனர். இவர்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும்.

அந்த வகையில் ராகு கேது ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்நிலையில் வருகின்ற மார்ச் 16ஆம் தேதி அன்று ராகு கேது தங்களது நட்சத்திரத்தை மாற்ற உ...