இந்தியா, மே 14 -- நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழியும் பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் இணைந்து சமீபத்தில் சென்னையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் இருவரும் தங்க ஜரிகையால் செய்யப்பட்ட உடையில் திருமண நிகழ்வில் பங்கேற்றனர். ஏற்கனவே, நடிகர் ரவி மோகன் அவரது மனைவி ஆர்த்தியை பிரிய கெனிஷா தான் காரணம் என கூறப்பட்டு வரும் நிலையில் அவர்கள் இருவரும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது பேசுபொருளானது.

இந்த நிலையில் தான், கெனிஷாவின் தோழி ஒருவர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இன்ஸ்டாகிராமில் கருத்து தெரிவித்துள்ளார். இந்தப் பதிவில், கெனிஷாவை இறுக்க கட்டிப்பிடித்திருக்கும் புகைப்படத்தையும் பகிந்துள்ளார்.

விஜயந்தி ராஜேஸ்வர் என்ற கெனிஷாவின் நண்பர், "கடந்த சில நாட்களாக நான் அமைதியாக இருந்தேன. இந்த நாட்கள் எவ்வளவ...