இந்தியா, பிப்ரவரி 25 -- ரவை என்பது கோதுமை, அரிசி, மக்காச்சோளம் போன்றவற்றை அரைத்து தயாரிக்கப்படும் ஒரு கரடுமுரடான உணவுப் பொருள். இதன் ஆங்கிலப் பெயர் செமொலினா. தமிழ்நாடு மட்டும் அல்லாது இந்தியாவின் பல பகுதிகளிலும் ரவையை பயன்படுத்தி பலவிதமான உணவுகளை செய்கின்றனர். தமிழ்நாட்டில் ரவையை வைத்து செய்யப்படும் பிரதான உணவு என்றால் அது ரவை உப்புமா தான். ஆனால் ரவா லட்டு, கிச்சடி, கேசரி போன்ற பல வகை இனிப்பு உணவுகளும் இதில் இருந்து செய்யப்படுகிறது. இதைத் தவிர ரவையை வைத்து இட்லி, தோசை மற்றும் ஊத்தாப்பம் போன்ற காலை உணவுகளையும் செய்யலாம். அவசரமான காலை வேளைகளில் இது ஒரு சிறந்த தேர்வாகும். குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம். ரவை ஊத்தாப்பம் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

ஒரு கப் ரவை

அரை கப் அவல்

அரை கப் தயிர்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு தண்ணீர்...