இந்தியா, பிப்ரவரி 27 -- இந்தியாவில் தொலை தூரங்களுக்கு செல்வது தொடங்கி குறைவான தூரங்கள் வரை பல விதமான பயணங்களுக்கு ரயில் உதவுகிறது. அதிலும் அலுவலகத்திற்கு செல்ல தினமும் ரயில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இது போன்ற ரயில் பயணத்தில் பலர் தூங்கி அவர்களது நிறுத்தத்தில் இறங்காமல் சென்று விடுவார்கள். மேலும் நீண்ட தூரங்களுக்கு செல்பவர்களும் அவர்களுக்கான நிறுத்தத்தை கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதனை சரி செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

முன்பதிவு ரயில்களில் இருக்கையை தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால் இருக்கை குறித்தான அமைப்பு வேண்டும் என கேட்க முடிய்யும். இல்லையெனில் பயணிகள் ரயிலில் உங்களுக்கு வாய்ப்பு இருந்தால், ரயிலில் இருக்கையைத் தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஒரு ரயிலில் பெரும்பாலான மக்கள் ஜன்னல் ...