இந்தியா, மே 24 -- உங்கள் ரத்த அழுத்ததைப் பராமரிக்க இயற்கையில் அன்றாடம் நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டிய உணவுகள் எண்ணற்றவை உள்ளது. நீங்கள் உங்கள் இதயத்துக்கு உதவவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அவை என்னவென்று பாருங்கள்.

வாழைப்பழம் என்பது உங்களுக்கு எளிதாக கிடைக்கக்கூடியது. இதை நீங்கள் ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். இதில் பொட்டாசியம் உள்ளது. இது உங்கள் உடலில் சோடியத்தின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதிகப்படியான சோடியச் சத்துக்கள், உங்கள் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். எனவே பொட்டாசியச் சத்துக்கள் நிறைந்த வாழைப்பழம் போன்ற உணவுகள் அந்த விளைவை எதிர்க்க உதவும்.

கீரைகள், காலே, கொலார்ட் மற்றும் ஸ்விஸ் சார்ட் போன்ற கீரைகள் உங்கள் ஆரோக்கியத்துக்கு மட்டும் உதவவில்லை. இவை உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும்...