இந்தியா, பிப்ரவரி 25 -- ரஜினிகாந்த்: குட் நைட் படத்தை இயக்கிய இயக்குநர் விநாயக் சந்திரசேகரனை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.

இது குறித்து விநாயக் தன்னுடைய எக்ஸ் தளத்தில், 'கனவு நனவானது.. தலைவரின் ஆட்டோகிராஃப் கிடைத்து விட்டது. குட் நைட் படத்தை அவர் பாராட்டினார். என்னுடைய கனவை நிஜத்தில் மாற்றியதற்கு நன்றி, தலைவா!' என்று பதிவிட்டு இருக்கிறார். இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது!

நம்மில் பலர் தூங்கும் போது குறட்டை விடுவர். நம் பக்கத்தில் யாராவது குறட்டை விட்டால், நாம் மிகவும் எரிச்சலடைவோம். முடிந்தால் தள்ளி போய்விடுவோம் வழி இல்லையென்றால், அவர்களின் குறட்டைக்கு பழகிவிடுவோம். இப்படியான குறட்டையின் பின்னணியில் ஒரு திரைப்படம் எடுத்தால் எப்படி ...