இந்தியா, ஏப்ரல் 13 -- ரசம், தென்னிந்திய உணவுகளுள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். முழு தென்னிந்திய மதிய உணவில் சாம்பார், ரசம், மோர் ஆகிய மூன்றுக்கும் முக்கிய இடம் உள்ளது. இதைத் தவிர கூட்டு, பொரியல், வறுவல் என காய்கறிகளுக்கும் முக்கிய இடம் உண்டு. ரசம் பொதுவாக ஜீரணத்தை தூண்டக்கூடிய ஒன்றாகும். அதனால்தான் தென்னிந்த உணவுகளுள் ரசம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரசம் மட்டுமே இருந்தால் கூட சாப்பாடு சுவைக்கும். ஆனால் ரசம் இல்லாவிட்டால் சாப்பாடே முழுமை பெறாது.

பொதுவாக ஃபிரஷ்ஷான மசாலா அரைத்தும் ரசம் தயாரிக்கப்படும். பொடியையும் செய்து வைத்துக்கொண்டும் ரசம் வைக்கலாம். ஆனால் இந்த ரசப்பொடியை சேர்த்து நீங்கள் ரசம் வைத்தால், உங்கள் ரசத்துக்கு அது கூடுதல் சுவையைக் கொடுக்கிறது.

பொதுவாக புளிக்கரைசல் மற்றும் தக்காளியை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தூவி நல்ல ந...