இந்தியா, ஏப்ரல் 3 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகமாக விளங்க கூடியவர். கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு சொல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர இடமாற்றமும் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் அணி ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

அந்த வகையில் கேது பகவான் கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று உத்திரம் நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் இருந்து இரண்டாம் பாதத்திற்கு இடமாற்றம் செய்தார். கேது பகவானின் உத்திரம் நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் ஒரு சில ராசிகளுக்கு ராஜ வாழ்க்கையை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்த...