இந்தியா, மே 28 -- "யாரைக் காப்பாற்ற இந்த வேகம்? காலம் மாறும் ! காட்சிகள் மாறும். விரைவில் அதிமுக ஆட்சி அமையும். அந்த SIR "யாராக இருந்தாலும்". கூண்டேற்றட்டப்படுவார். SIR-ஐக் காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர் என்று அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கு தீர்ப்பு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் அதிமுக தொடர்ந்து போராட்டம் நடத்தி, மாணவியின் குரலாக மக்கள் மன்றத்தில் ஒலித்து வந்த தொடர் முன்னெடுப்புகளின் ஊடாக, தன்னிடம் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வ...