இந்தியா, பிப்ரவரி 26 -- மொழிக் கொள்கை விவகாரத்தில் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றா என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

கோயம்புத்தூரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற மறுசீரமைப்பில் தமிழ்நாட்டுக்கு அநியாயம் நடைபெற போவதாக கூறி முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மார்ச் முதல் வாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளார். தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் அவர்கள் பாஜகவுக்கும் கடிதம் எழுதி உள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் மேடையிலேயே தொகுதி மறுசீரமைப்பு எப்படி நடக்கும் என்பதை கூறி உள்ளார்.

543 நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும் போது எண்கள் கூடலாம். ஆனாலும் விகிதாச்சார அடிப்படையில் இது நடைபெறும். உதாரணமாக தேசிய அளவில் ...