இந்தியா, மே 10 -- நீங்கள் மசாலா தோசை பிரியரா? சாதாரண மசாலா தோசையாக இல்லாமல் மைசூர் மசாலா தோசை செய்வது எப்படி என்று பாருங்கள். இதைச் செய்வதற்கு ஒரு மசாலா மட்டுமல்ல ஒரு காரச்சட்னியும் தேவை. இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னியை நீங்கள் செய்யலாம். சூப்பர் சுவையானதாக இருக்கும்.

* உருளைக்கிழங்கு - 2

* சின்ன வெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* சீரகம் - கால் ஸ்பூன்

இரண்டு உருளைக்கிழங்கையும் நன்றாக வேகவைத்து தோல் நீக்கி மசித்துஎடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்கவேண்டும். சின்ன வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். அது பொன்னிறமானவுடன், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து...