இந்தியா, மே 24 -- மைசூர் பாக் என்பது கர்நாடகாவின் புகழ்பெற்ற இனிப்பாகும். இது மைசூர் நகரில் மிகவும் பிரபலமான ஒரு ஸ்வீட் ஆகும். இது ஒரு நெய் இனிப்பு ஆகும். இதை தயாரிக்க கடலை மாவு, சர்க்கரை மற்றும் ஏலக்காய் தேவை. பாக் என்றால், சர்க்கரை பாகை குறிக்கும் வார்த்தையாகும். மைசூர் பாக்கை தயாரிக்கப் பயன்படும் பாகுதான், பாக் என்று மாறியது. மைசூர் பாக் விழாக்கள், திருமணங்கள் மற்றும் விருந்துகளில் பரிமாறப்படும் ஒரு இனிப்பாகும்.

மைசூர் அரண்மணையில் இருந்து உருவான ஒன்றாகும். இதற்கு கடலை மாவு, நெய் மற்றும் சர்க்கரைதான் முக்கியமாகத் தேவைப்படும். இது வாயில் வைத்தவுடன் கரையும் தன்மைகொண்டது. இது கோயில்களில் பிரசாதமாகவும் பரிமாறப்படுகிறது. வெல்லம் வைத்தும் செய்யலாம். இன்று மைசூர் பாக் என்ற பெயர் மாற்றம் என்ற செய்தி டிரண்டிங் ஆகிவரும் வேளையில் நாம் மைசூர் பாக்...