மைசூர்,பெங்களூரு, மே 26 -- கர்நாடக சோப்புகள் மற்றும் சவர்க்காரம் லிமிடெட் (KSDL) ஆதரவு பெற்ற மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் தூதராக தமன்னா பாட்டியா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்து ரம்யா என தமிழக ரசிகர்களால் அறியப்படும் நடிகை ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, 'கர்நாடகா 'கன்னட பெருமைக்காக' போராடும் நேரத்தில் 'கன்னடிகர் அல்லாதவர்' பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது' குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க | மைசூர் சாண்டல் சோப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக தமன்னா.. ரூ.6.2 கோடிக்கு ஒப்பந்தம்

தமன்னா பிராண்ட் தூதராக நியமிக்கப்பட்டது குறித்து X (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராமில் ரம்யா தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார், "KSDL-ஐ புதுப்பிக்கும் நோக்கத்தைப் பாராட்டுகிறேன், ஆனால் செயல்படுத்துவது ஒரு கண்துட...