இந்தியா, மே 11 -- கிரகங்களின் பயணம் மனித வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சிலருக்கு மகிழ்ச்சியை தருவதோடு, சிலரது வாழ்வில் சிரமத்தையும் ஏற்படுத்துகிறது. கிரக மாற்றங்களால் உருவாகும் ஒவ்வொரு ராஜயோகமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தவகையில், வேத ஜோதிடப் படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் நவ பஞ்சம யோகமும் ஒன்றாகும்.

நவ பஞ்சம யோகம் என்பது வேத ஜோதிடத்தின்படி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் புனிதமான யோகங்களில் ஒன்றாகும். ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் அல்லது ஐந்தாவது வீட்டில் ஒரு கிரகம் இருக்கும்போது நவ பஞ்சம யோகம் ஏற்படுகிறது. இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகம் வரும் மே 22, வியாழக்கிழமை அன்று சந்திரன் மற்றும் குருவால் உருவாக்கப்படுகிறது.

வியாழக்கிழமை மதியம் 12:08 மணிக்கு, சந்திரன் மீன...