இந்தியா, மே 4 -- வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் ராஜாவாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம், கௌரவம் போன்றவற்றின் காரணியாகவும் சூரியன் கருதப்படுகிறார். சூரிய பகவான் சிம்ம ராசியின் அதிபதியாகவும் திகழ்ந்து வருகின்றார். உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக விளங்கும் சூரியன் மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றக்கூடியவர். அந்த வகையில் தற்போது சூரியன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார்.

அதே சமயம், கிரகங்களின் இளவரசனான புதன் பேச்சு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் புத்திசாலித்தனம் போன்றவற்றின் கிரகம். இந்த புதன் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இத்தகைய சூழ்நிலையில், இந்த புதன் வருகிற மே 07 ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார்.

மேஷ ராசியில் புதன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சூரிய பகவான் பயணித்து வருவதால், இவ்வ...