இந்தியா, ஏப்ரல் 17 -- நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்ட மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் மீண்டும் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இன்று திறக்கப்பட்ட நிலையில், இரு மணி நேரத்தில் மீண்டும் மூடப்பட்டது. 2023 ஏப்ரல் மாதம் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கோயில் பூட்டப்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புடன் கோயில் திறக்கப்பட்டது.

ஆனால், ஒரு தரப்பினர் வழிபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சமரச முயற்சிகள் தோல்வியடைந்து கோயில் மூடப்பட்டது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, வெளியூர் வ...