இந்தியா, ஜூன் 20 -- மேம்பட்ட பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு காரணங்களுக்காக, எட்டு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை ரத்து செய்துள்ளது. இதனால் விமானப் போக்குவரத்து இடையூறுகளின் அலையை ஏர் இந்தியா தொடர்ந்து எதிர்கொள்கிறது.

ஜூன் 12 அன்று ஏர் இந்தியா நிறுவனத்தின் ட்ரீம்லைனர் விபத்துக்குள்ளானதில் 270 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஒழுங்குமுறை ஆய்வு மற்றும் தொடர்ச்சியான பாதுகாப்பு சோதனைகள் அதிகரித்ததை அடுத்து இந்த ரத்து அறிவிப்பு வந்துள்ளது.

ஏர் இந்தியா விமானங்கள் ரத்து காரணமாக பாதிக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் AI906 (துபாய் - சென்னை), AI308 (டெல்லி - மெல்போர்ன்), AI309 (மெல்போர்ன் - டெல்லி) மற்றும் AI2204 (துபாய் - ஹைதராபாத்) ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க: நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.....