இந்தியா, மார்ச் 31 -- ஐபிஎல் 2025 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ், மூன்றாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பானதொரு வெற்றியை பெற்றது. ராஜஸ்தான் அணியின் இரண்டாவது உள்ளூர் மைதானமான கவுகாத்தியில், அணியின் தற்போதைய தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வரும் ரியான் பராக் கேப்டன்சியில் வெற்றியுடன் புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் இளம் கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ரியான் பராக், தனது முதல் வெற்றியை சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். பராக் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் போட்டி நடைபெற்ற கவுகாத்தியில் தனது மாநில மக்களுக்கு எதிராக பராக் பெற்றிருக்கும் இந்த வெற்றி அவருக்கு சிறப்பு வாய்ந்ததாகவே அமைந்துள்ளது...