இந்தியா, ஏப்ரல் 20 -- மலையாள நடிகர் மோகன்லால் அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி தனக்கு அளித்த பரிசை வீடியோவாக வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து மோகான்லால் வெளியிட்டு இருக்கும் அந்த வீடியோவில், மெஸ்ஸி மோகன்லாலுக்கு வழங்கப்பட்ட ஜெர்ஸியில் கையெழுத்து போடும் வீடியோவும், அதனைப்பெற்றுக்கொண்ட மோகன்லாலின் புகைப்படமும் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் படிக்க | L2 Emburaan Movie: குறுக்கிட்ட அரசியல்.. எம்புராண் படத்தில் மாற்றம்.. மன்னிப்பு கேட்ட மோகன்லால்..

மேலும், அதனுடன் மோகான்லால் இணைத்திருக்கும் பதிவில், ' வாழ்க்கையில் சில தருணங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானவை. அவை என்றென்றும் உங்களுடன் இருக்கும்.இன்று, அந்த தருணங்களில் ஒன்றை நான் அனுபவித்தேன்.

நான் அந்தப் பரிசை மெதுவாகப் பிரி...