இந்தியா, மார்ச் 15 -- 40 வயதை நெருங்கும் பெண்களுக்கு ப்ரீ மெனோபாஸ் காலத்தில் பல்வேறு உடல் மற்றும் மன மாற்றங்கள் ஏற்படும். மேலும் இந்த காலகட்டத்தில் பெண்கள் மிட் ஏஜ் கிரைசிஸிலும் சிக்கிக்கொள்வார்கள். இளமையில் இருந்து முதுமைக்கு மாறும் பருவமும் இது. அப்போது காரணமின்றி தலைமுடி உதிர்தல், நரை முடி, சருமத்தில் சுருக்கம் என பல்வேறு பிரச்னைகளும் எட்டிப்பார்த்து, நமது பொலிவை இழக்கத் துவங்குகிறோமோ என்ற எண்ணம் ஏற்படும். இதனால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். இந்த தருணத்தில் உங்களையும் கவனித்துக்கொள்ளவேண்டும். வீட்டையும் கவனிக்கவேண்டும். அதிலும் குழந்தைகளின் படிப்பு, ஒரு சிலருக்கு குழந்தைகள் முக்கிய தேர்வுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலை இருக்கும். கூடுதலாக அந்த சுமைகளும் உங்களை பாதிக்கும். இந்நிலையில் நீங்கள் செய்யவேண்டியது என்னவென்பது குறித்து டாக்ட...