திருச்சி,தஞ்சாவூர்,மதுரை, மார்ச் 10 -- டிபன், மதிய உணவு, இரவு உணவு எதுவாக இருந்தாலும, அதற்கு ஒரே சைடிஷ், வடை தான். 'என்ன வடை.' என்று நகைச்சுவையாக சொன்னாலும், வாயில் வடை சுட்டாலும், சுடச்சுட வடை சுட்டால், அதன் ருசியே, தனி ருசி தான். அதிகாலையில் தொடங்கி, இரவு வரை, இல்லங்களிலும், உள்ளங்களிலும், கடைகளிலும் எண்ணெய் குளியல் போட்டுக் கொண்டிருக்கும் மெது வடை எனப்படும் உளுந்து வடையை எப்படி தயாரிக்கலாம்? அதுவும் கடைக்கு இணையாக, அதற்கும் மேலாக.. இதோ பார்க்கலாம்.

மேலும் படிக்க | இன்ஸ்டன்ட் அப்பளம் ரெசிபி: ஒரே நாளில் உடனடியாக அப்பளம் செய்யலாம்!-எப்படினு பாருங்க

சுத்தமான நயம் உளுந்து பருப்பை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கி உளுந்தை சுத்தமாக கழுவி, 3-4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். உளுந்து ஊறியதும், அதை அள்ளி, மிக்சியில் சற்று தண்ணீர் சேர்த்து, ந...