இந்தியா, ஏப்ரல் 9 -- உடலுக்கு தேவையான ஆற்றவை உள்ளுக்குள் இருந்து கொடுப்பது மெக்னீசியச் சத்துக்கள்தான். இது தசைகளை வலுப்படுத்துகிறது. இதயத்தை நன்றாக வைத்துக்கொள்ளவும், உறக்கத்தை சிறப்பாக்கவும், மனஅழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால் இதை அன்றாட சாப்பாட்டில் இருந்து பெறமுடிவது கடினம். எனவே மெக்னீசியச்சத்துக்கள் நிறைந்த நட்ஸ்கள் மற்றும் விதைகள் எவையென்று பாருங்கள்.

பாதாமில் மெக்னீசியச் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கைப்பிடியளவு பாதாமில் 80 மில்லி கிராம் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இதில் ஆரோக்கிய கொழுப்பு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளது. இவை உடலுக்கும் தேவையான ஆற்றலை நாள் முழுவதும் கொடுக்கிறது. இதை வறத்தோ அல்லது அப்படியேவோ சாப்பிடலாம். இதை ஓரிரவு ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. இது ஃபைட்டிக் அமிலத்தைக் குறைக்கிறது. இந்த அமிலம் மெக்னீசியச...