இந்தியா, ஏப்ரல் 6 -- இந்தக் கட்டுரை ஊட்டச்சத்து நிபுணர் கரிமா கோயல் அவர்களால் சரிபார்க்கப்பட்டது.

உங்கள் இதய ஆரோக்கியத்துக்கு தேவையான முக்கியமான ஒன்றாக மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இது உங்கள் இதயம் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. காரணமே இல்லாமல் உடல் சோர்வை உணர்ந்திருக்கிறீர்களா? தசை வலி, அதிகப்படியான சோர்வு, இவையெல்லாம் நீங்கள் போதிய அளவு மெக்னீசியச் சத்துக்கள் எடுத்துக்கொள்ளாததால் ஏற்படும் பிரச்னையாகும். உங்கள் உடலுக்கு மெக்னீசியச் சத்துக்கள் கட்டாயம் தேவை. இது உங்கள் தசைகள் மற்றும் நரம்புகள் நல்ல முறையில் இயங்க உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவுகளை முறைப்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது. எலும்புகளை வலுவாக்குகிறது. ஆனால் அன்றாட உணவில் பெரும்பாலானோர் போதிய மெக்னீசியச் சத்துக்களை எடுத்துக்கொள்வதில்லை. இதனால் சோர்...