இந்தியா, ஏப்ரல் 30 -- வயோதிக காலத்திலும் உங்களின் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வதுபோல் முக்கியமானது. மூளையும் ஒரு தசைதான். அதை நீங்கள் அதிகம் பயன்படுத்தும்போது, அது வலுவானதாகவும், ஷார்ப்பானதாகவும் மாறும். எனவே வயதாகும்போது மூளையின் ஆற்றல் குறையவேண்டும் என்றல்ல. இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த மூளை பயிற்சிகள் போதும், உங்கள் மூளையின் ஆற்றல் ஷார்ப்பாகவும், நீங்கள் மனஅளவில் ஃபிட்டாகவும் இருக்க உதவும். அவை என்னவென்று பார்க்கலாம்.

உங்கள் மூளையை ஷார்ப்பாக வைத்துக்கொள்வதில், ஒரு சிறந்த வழி புதிய விஷயங்களை கற்பதை உங்கள் மூளைக்கு சவாலாக்குங்கள். புதிய பழக்கத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். ஒரு புதிய இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்ளுங்கள் அல்லது புதிய மொழியை கற்றுக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஒரு புதிய ரெசிபியை செய்யுங்கள் அல...