இந்தியா, ஏப்ரல் 21 -- உங்கள் மூளையை ஷார்ப்பாக்கி, அதை தக்கவைக்க என்ன என்ன செய்யவேண்டும்? இதற்காக சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இது உங்களின் ஐக்யூவை அதிகரித்து, கவனத்தை மேம்படுத்தும். இந்த குறிப்புகள் முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டவையாகும். இது மாணவர்களுக்கு, பணி செய்பவர்களுக்கு மற்றும் தங்கள் மூளையின் திறனை முடுக்கிவிட நினைக்கும் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது.

புத்தகம் வாசிப்பது உங்களின் வொகேபுலரி, புரிதல் மற்றும் மனதின் இயக்கத்தை அதிகரிக்கும். எனவே புத்தகங்கள், ஆர்டிக்கல்கள் அல்லது செய்தித்தாள்களை தினமும் வாசிக்க வேண்டும். இது உங்கள் மூளையை விழிக்கச் செய்து, உங்களின் கவனத்தை மேம்படுத்துகிறது. உங்களின் மனதை திறந்து வைக்கிறது.

அன்றாடம் 10 நிமிடம் அமைதியான தியானத்தை செய்யவேண்டும். இது உங்களின் கவனத்தை அதிகரிக்கும்,...