சென்னை,கோவை,மதுரை,திருச்சி, ஏப்ரல் 19 -- திருமணம் என்ற பேச்சை ஆரம்பித்தாலே, பெரும்பாலானோர் செவ்வாய் தோஷத்திற்கு அடுத்தபடியாக பெரிதும் பார்ப்பது நட்சத்திரங்களைதான். "மூலம் நட்சத்திரமா? மாமனாருக்கு ஆகாது, ஆயில்யம் நட்சத்திரமா? மாமியாருக்கு ஆகாது, கேட்டை நட்சத்திரமா? அண்ணனுக்கு ஆகாது, பூராடமா கழுத்தில் நூலாடாது" என்று பேசுவார்கள்.

மேலும் படிக்க | பரணி சூரியன்: பரணி கொட்டி தீர்க்கும் பண மழை ராசிகள்.. சூரியன் பரணியில் நுழைகிறார்.. பணக்கார ராசிகள் யார்?

மூலம், ஆயில்யம், கேட்டை, பூராடம் நட்சத்திரங்களில் பெண் பிறந்துவிட்டால், பெற்றவர்களின் நிலை கவலைதான். நம்மில் பலர் பழைய கதைகளை பேசிக்கொண்டே, கையில் கிடைக்கும் நல்ல வரன்களை தொலைத்துவிட்டு அலைந்துதிரிவோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதெல்லாம் நட்சத்திரங்களின் கட்டுக்கதை. ஜோதிட சாஸ்திரத்தில் கு...