இந்தியா, பிப்ரவரி 28 -- மூன்று முடிச்சு சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில், வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் சூர்யாவை எங்காவது வெளியில் கூட்டிச் செல்ல அவரது அப்பா பல திட்டங்களை தீட்டி வருகிறார். சுந்தரவள்ளி அதற்கெல்லாம் பல காரணங்கள் சொல்லி முட்டுக் கட்டை போட்டு வந்தார்.

இந்த நிலையில், சூர்யா, நந்தினி, சூர்யாவின் அப்பாவை தவிர வீட்டில் உள்ள எல்லோரும் காரை எடுத்துக் கொண்டு ஷாப்பிங் போயிருந்தனர். இதைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் சூர்யாவின் அப்பாவைப் பார்க்க விஜியும், விவேக்கும் வந்திருந்தனர். அவர்கள் எங்காவது வெளியூர் போகலாம் என இருக்கோம் என அவரிடம் கூற அவர் சூர்யாவையும் உடன் கூட்டிப் போக சொல்கிறார். சூர்யா முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்தாலும் பின் சம்மதம் கூறுகிறார்.

மேலும் படிக்க: நந்தினிக்காக திட்டம் போடும...