இந்தியா, பிப்ரவரி 25 -- மூன்று முடிச்சு சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், அர்ச்சனா அவள் வேலைக்கு அமர்த்திய வேலைக்காரியிடம், எல்லா திட்டங்களும் சரியாக நடக்க வேண்டும் என்று மறுமுறை எச்சரிக்கிறாள்.

இந்த நிலையில் வேலைக்காரி சூர்யாவின் அறைக்குள் சென்று வெளியே வர, அங்கு வந்த நந்தினி இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று அவளிடம் கேட்டாள். அவள் ரூமை பெருக்குவதற்காக வந்தேன் என்று கூற, நந்தினி உன்னிடத்தில் விளக்கமாறே இல்லை பின்னர் எப்படி நீ பெருக்குவாய் என்று கேட்டாள். இதைக்கேட்ட அவள் திணறினாள். இன்னொரு பக்கம் சரக்கு பாட்டிலை எடுத்து சூர்யா பார்த்துக்கொண்டிருந்தான். இதை நந்தினி பார்த்தாள்' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | மருமகள் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்:...