இந்தியா, பிப்ரவரி 24 -- மூன்று முடிச்சு சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: மூன்று முடிச்சு சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரொமோவில், அர்ச்சனா சூர்யாவின் தனி அறையில் நின்று கொண்டிருக்க, அங்கு நந்தினி வந்தாள். அப்போது அர்ச்சனா உண்மையில் நீயும், நந்தினியும் மிகச் சரியான ஜோடிதான் என்று தூங்கிக்கொண்டிருந்த சூர்யாவை நோக்கி பேசிக் கொண்டிருந்தாள்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 24 எபிசோட்: வெளியே வந்த ஆதி குணசேகரன்.. தாண்டவம் ஆடிய கதிர்.. எதிர்நீச்சல் சீரியல்..

இதனையடுத்து சூர்யாவிடம் சென்ற நந்தினி, அர்ச்சனா நல்ல பெண்ணாகதான் தெரிகிறாள் என்று கூற, கொதித்து போன அவன், அவளெல்லாம் ஒரு பெண்ணே கிடையாது என்று சாடினான். இதற்கிடையே, இவ்வளவு பிரச்சினைகளுக்கும் ஆனந்திதான் காரணம் என்று அர்ச்சனாவின் முன்னரே ஆனந்தியை சுந்தரவல்லி அவமானப்படுத்தினாள் ...