இந்தியா, ஏப்ரல் 23 -- சமூக சீர்திருந்த கருத்துக்கள் வலுவாக வேரூன்றியுள்ள தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தடுப்பு சட்டத்தை கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்து உள்ளார்.

மேலும் படிக்க:- 'டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தலாம்!' உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தமிழக அரசின் மனு தள்ளுபடி!

தமிழக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன் தமிழ்நாட்டில் மூட நம்பிக்கை தடுப்பு சட்டம் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நமக்கென்று ஒரு கொள்கை இருக்கலாம். அதை மக்கள் மீது திணிக்க இயலாது. மூட நம்பிக்கையை சட்டம் போட்டு தடுக்க முடியாது என்று பதில் அளித்தார்.

இதற்கு சபா...